இனி வரும் காலங்களில் தேர்தலில் போட்டியிட மாட்டேன்-வீ.இராதாகிருஸ்ணன் தெரிவிப்பு

ஹற்றனில் உள்ள மலையக மக்கள் முன்னணியின் கட்சி காரியாலயத்தில் இன்று நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போது, கட்சியை மறுசீரமைத்து கட்டியெழுப்ப வேண்டிய தேவையிருப்பதால் இனிவரும் காலங்களில் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலங்களில் கட்சியைக் குழப்பினால் எப்படி முன்னோக்கிப் பயணிக்க முடியும் .தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு தேசிய பட்டியல் வழங்கப்படாவிட்டால் நிச்சயம் மாற்று நடவடிக்கையில் இறங்குவோம்.இதுதான் எனது கடைசி தேர்தல்.இனிமேல் போட்டியிட மாட்டேன்.மலையக மக்கள் முன்னணியும் மறுசீரமைக்கப்படும்.

மேலும் மலையக மக்கள் முன்னணியை பிளவுப்படுத்துவதற்கு சிலர் முயற்சித்தனர்.எமக்கு அழுத்தத்தைக் கொடுத்ததுடன் மனசாட்சியின்றி செயற்பட்டனர்.

மலையக மக்கள் முன்னணியின் மாநாடு கூட்டப்படும்.எல்லா கட்டமைப்புகளும் கலைக்கப்படும்.புதிதாக உருவாக்கப்படும்.இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

No comments: