பதுளை மாவட்ட தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையை சீரழிப்பதற்கு இனவாத அரசியல்வாதி சதித்திட்டம்-வடிவேல் சுரேஸ் கண்டனம்
நாட்டை ஆள்வதற்குரிய எல்லா அரசியல் அதிகாரங்களும் நாட்டு மக்களுக்கே உரித்தானது.மக்களாட்சி அதாவது ஜனநாயக ஆட்சி நடைபெறும் நாட்டில் வாக்கரிமை என்பது இன்றியமையாதொன்றாகும்.அத்தகைய உரிமையை பிரயோகிக்கும் இத்தருணத்தில் போலியான பிரசாரங்களை முன்னெடுத்து மக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர் சில இனவாதிகள்.
வாக்களிக்கப் பயன்படுத்தப்படும் அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்தி எந்த வேட்பாளருக்கு அவ்வாக்கு செலுத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும் எனவும் அவ்வாறு தங்களுடைய கட்சிக்கு வாக்களிக்காத பட்சத்தில் எதிர்காலத்தில் பல அரசியல் பழிவாங்கல்களுக்கு முகங்கொடுக்க தயாராக இருக்க வேண்டும் மக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து வருகின்றார் பதுளை மாவட்ட இனவாத அரசியல்வாதியும் அவரினுடைய கைக்கூலிகளும்...
அடையாள இலக்கத்தை வைத்து யாருக்கு வாக்களிக்கப்பட்டது என கண்டறிய முடியும் என இவர்கள் விடுத்துள்ள இச்செய்தியானது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும்.எமது மக்களை மேலும் மேலும் அடிமைப்படுத்த வேண்டும் என இவர்கள் முன்னெடுக்கும் ஒவ்வொரு செயற்பாடும் கேலிக்கூத்தாகவுள்ளது.ஆகவே மக்கள் அனைவரும் எதுவித ஐயமுமின்றி சுதந்திரமாக தங்களுடைய வாக்கை அளிக்க முடியும்.
மக்கள் தெளிவாகவுள்ளனர்.அத்தகைய அடாவடித்தனங்கள் அனைத்திற்கும் எதிர்வரும் 6ம் திகதி மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் இந்த இனவாத கும்பல்களுக்கு.

No comments: