வடக்கிற்கான புகையிரத பாதையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு

இன்று அதிகாலை 3.45 மணியளவில் காங்கேசன் துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ஸ்ரீ தேவி புகையிரதத்தில் மாங்குளம் மற்றும் புளியங்குளம் இடையே காட்டு யானை ஒன்று புகையிரதத்தில் மோதுண்டதன் காரணமாக வடக்கிற்கான புகையிரத சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக குறித்தப் பகுதியில் தண்டவாளம் தடம் புரண்டுள்ளதாகவும் புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளதோடு புகையிரதத்துடன் மோதுண்ட காட்டு யானை உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments: