புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்பு
இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் 14 வது பிரதமராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பதவி ஏற்றுள்ளார்.
களனி ரஜமஹா விகாரையில் பதவியேற்புக்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ முன்னிலையில் தற்போது பிரதமராக பதவிப் பிரமானம் செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.
அத்தடன் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்கும் 4வது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

No comments: