2021ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விண்ணப்பப் படிவங்கள் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்
2021 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விண்ணப்பப் படிவங்களை விநியோகிக்கும் நடவடிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கமைய குறித்த விண்ணப்பப் படிவங்கள் கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக வீடுகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், தேசிய அடையாள அட்டையை வைத்திருக்கும் ஒவ்வொரு நபரும் தங்களது பெயரை தேர்தல் பட்டியலில் இணைத்துக்கொள்ளுமாறும் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கமைய, கிராம உத்தியோகத்தர்களினால் வழங்கப்படும் பீ.சி. படிவத்தை பூர்த்திசெய்து சமர்ப்பிக்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வாக்காளர் பட்டியலை உறுதி செய்யும் நடவடிக்கை இடம்பெறவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக பொதுத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் பட்டியலின் திருத்தப் பணிகள் தாமதமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: