யாழ் மாவட்டத்தில் அமைதியான முறையில் நடத்தப்பட்ட 2020 பாராளுமன்றத பொதுத் தேர்தல்



யாழில் மிகவும் வெற்றி காரமான முறையில் அமைதியாக தேர்தலை நாடாத்தி முடித்துள்ளோம். 

இலங்கை பாராளுமன்றத் தேர்தல் 2020   வாக்களிப்பு  [05'08'2020 ] காலை 7 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை  இலங்கை முழுவதும் இடம்பெற்றது. 

அந்தவகையில் யாழ்மாவட்டத்தில்  மிகவும் வெற்றி கரமாக  வாக்களிக்கும் பணியை நடாத்தி முடித்துள்ளோம் என யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரச அ திபருமான க.மகேசன் தெரிவித்தார். 

வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில் யாழ் மத்திய கல்லூரியில்  அமைக்கப்பட்டுள்ள மத்திய நிலையத்திற்கு   வாக்கெண்ணும் பெட்டிகள் வந்தடைந்த நிலையில்  இடம்பெற்ற  ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில் 
கடந்த வருட  பாராளுமன்ற தேர்தலில்  [2015 ]  59.8 வீதமும் , கடந்த ஜனாதிபதி தேர்தலில் 66.6 வீதமும்  வாக்களிக்கப்பட்டு வந்த நிலையில் இவ்வருடம் 67.72 வீதம் யாழ் மாவட்டத்தில்  வாக்களிக்கப் பட்டுள்ளமையினைப் பார்க்கும்  போது  மிகவும் வெற்றி கரமாக அமைதியாக நடாத்தியுள்ளோம் என்றே சொல்லவேண்டும் 
தவிர .98 வீதம் தபால் மூல வாக்களிப்பும்  இடம் பெற்றுள்ளது.   இந்த வெற்றிக்காக   தேர்தல் ஆணைக்குழு, பொது சுகாதார பணியாளர்கள், போலீஸ் உத்தியோகத்தர்கள், அரச அலுவலர்கள், உட்பட ஊடக துறையினரின் விழிப்புணர்வு பிரச்சாரமும்  பெரும் பங்கு வகித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் அத்தனை விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு தெரியப்படுத்தியதன் மூலம் அவர்களும் அதனை பொறுப்புடன் செயற்படுத்தி  உள்ளனர். 

வாக்குப் பெட்டிகள் யாவும்  சீல் வைக்கப் பட்டு  பாதுகாக்கும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. கட்சிகளின் முகவர்கள் மத்திய நிலையத்தில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். நாளை காலை 7 ,ம ணிக்கு யாழ்  -ஊர்காவற்றுறை  வாக்குகள் என்னும் பணி ஆரம்பமாகும் . 8 மணியிலிருந்து ஏனைய  பிரதேசங்களின் வாக்குகள் எண்ணப்படும் .   முதலாவது பெறுபேறு  மதியவேளையில்  வெளியிடப்படலாம் என்று நினைக்கின்றேன் என்றார். 

மேலும். கொரோனா கால சூழலை அடிப்படையாக வைத்து வாக்களிப்பு வீதம் குறைவடையும்  என கணிப்பிடப்பட்டு வந்த நிலையில் மக்கள் சகல சுகாதார நடைமுறைகளுடன் வேகமாக வாக்களிக்கும் கடமையில் ஈடுபடாமையினை அவதானிக்க முடிந்தமை  குறிப்பிடத்தக்கது. 

No comments: