தேர்தல் காரியாலயம் அமைக்க அனுமதி
நேற்று தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில், கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்களுக்கு மாத்திரமே தேர்தல் அலுவலகத்தை அமைக்கஅனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தனி நபருக்கென்று அலுவலகம் அமைக்க முடியாதென்றும், தேர்தல்கள் சட்டத்திற்கு அமைவாகவே தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் கட்சி அலுவலகங்களில் கட்சி அல்லது சுயாதீனக்குழுக்களின் பெயர் மற்றும் சின்னத்தை மாத்திரமே காட்சிப்படுத்த வேண்டும் எனவும் தனிநபர்களின் விருப்பு இலக்கங்களை வெளித் தெரியும் வகையில் காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு விளக்கம் அளித்துள்ளது.
No comments: