விமானப் படையினரைத் தாக்கிய இருவர் கைது


முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத் தளத்தினைச் சேர்ந்த விமானப்படையினர் இருவர் சூரிபுரம் பகுதியில் கிராமத்திற்குள்  பாதுகாப்பு கடமைக்காக சென்ற போது அங்கு இருந்த இளைஞர்கள் விமானப்படையினரை தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் ஒரு விமானப்படை வீரர் காயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதோடு தாக்குதல் நடத்திய இரு  இளைஞர்களை முள்ளியவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதன்படி  அவர்களை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

No comments: