மஸ்கெலியா நல்லத்தண்ணி வீதியில் நிலச்சரிவு போக்குவரத்து ஸ்தம்பிதம்
(நீலமேகம் பிரசாந்த்)

நேற்று (07) காலை 10.30 மணியளவில் நல்லதண்ணி மோகினி எல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து தடைபட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும்,மோகினி நீர்வீழ்ச்சியின் அருகில் ஏற்பட்டுள்ள மண் திட்டு சரிவில் கற்பாறைகள் காணப்படுவதால் நல்லத்தண்ணி மஸ்கெலியா போக்குவரத்து நடவடிக்கைகள் மற்றும் மறே மஸ்கெலியா போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளது.

ஆகையால் நல்லத்தண்ணி நகரில் இருந்து வருகைதரும் பயணிகள் மற்றும் மஸ்கெலியா நகரில் இருந்து வருகைதரும் பயணிகள் லக்சபான வரை மட்டுப்படுத்த பட்டுள்ளது.

ஆகவே உடன் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாதையில் காணப்படும் கற்பாறை மற்றும் மண் திட்டை கனரக இயந்திரங்களின் உதவியுடன் அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்சிறி பெனார்ந்து தெரிவித்தார்.

No comments: