இலஞ்சம் பெற்ற வைத்தியசாலை அதிகாரி கைது

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சுகாதார நிர்வாகப் பிரிவு மேற்பார்வை உத்தியோகத்தர் இன்று 10,000 ரூபா இலஞ்சம் பெற்றமை தொடர்பில்  கைது  செய்யப்படடுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும்  பணியாளர் ஒருவருக்கான கடமைகளை அவர் விரும்பிய பிரிவிற்கு மாற்றி வழங்குவதற்காக 15,000 ரூபா இலஞ்சம்  அவரால் கேட்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று பிற்பகல் சந்தேக நபரை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 21ம்  திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்..



 

No comments: