என்னைவிமர்சிப்பவர்கள் எனக்கு ஒரு தூனாக இருக்கிறார்கள் -ஜீவன் தொண்டமான்


(எஸ்.சதீஸ்)


மாற்று கட்சியினர் என்னை விமர்சனம் செய்ய செய்ய நான் வழர்ந்து கொண்டேதான் இருப்பேன் 

என்னை விமர்சிப்பவர்கள் எனக்கு ஒரு தூனாக இருக்கிறார்கள் அவர்களுக்கு முதற்கண் தாம் நன்றியினை தெரிவித்து கொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார் 

டிக்கோயா தரவாளை தோட்டபகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உறையாற்றும் உறையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார் . 

இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர்கலான மறுதபாண்டி ராமேஸ்வரன் கணபதி கணகராஜ் என பலரும் கலந்து கொண்டனர் 

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த ஜீவன் தொண்டமான் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் கடந்தகாலங்களில் மக்களோடு இருந்ததொடர்பினை
கடந்த காலங்களில் இழந்து விட்டது ஏன் எனில் எனது தந்தை முன்னால் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களை மக்கள் சந்திப்பதற்கு சென்றால் அவரை சந்திப்பதற்கு மற்றவர்கள் உள்ளே விடுவதில்லை 

இது திட்டமிட்டு மக்களையும் தலைவரையும் பிரித்தார்கள் அநேகமான தோட்டபகுதியில் மாற்றுகட்சி உறுப்பினர்கள் இருக்கிறார்கள் இந்த உறுப்பினர்கள் கட்சியில் இருந்தோ ஆறுமுகன் தொண்டமானை விட்டு பிரிந்ததிற்கு ஒருபோதும் ஆறுமுகன் தொண்டமான் காரணமில்லை அதற்கு காரணம் அவரை சுற்றிஇருந்த ஒரு சிலர்தான் காரனம் .

அபிவிருத்தி தொடர்புபட்ட விடயத்தினை நாம் நேரடியாக கண்கானித்து இருந்தால் அபிவிருத்திகள் சிறந்தமுறையில் இடம்பெற்றிருக்கும் இவை அனைத்தும் சிபாரிசு ஊடாக இடம்பெற்றமையால் தான் இந்த பிரச்சினைகள் எற்பட்டது 

தோட்ட தொழிலாளர்கள் ஆயிரம் ருபா சம்பளத்தினை கோறியது சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு அல்ல தமது பிள்ளைகளின் கல்விக்கும் வாழ்வாதாரத்திற்கும் தான் கோரினார்கள் 

நான் யாரையும் கூறை கூறுவது இல்லை சிலர் கூறுகிறார்கள் ஜீவன் தொண்டமானுக்கும் மலையகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லையென மலையகத்தில் உள்ள வீதிகள் சில இனனமும் மோசமான நிலையிலே கானப்படுகிறது 

நான் மற்றவர்களை போல் அனாகரிகமான அரசியல் செய்யமாட்டேன் முன்னால்அமைச்சர்கள்தான் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டார்கள் என நான் கூறமாட்டேன் 

மலையகத்தில் போதை பொருள் கானப்படேகிறது அதற்கு காரனம் நீங்களும் நானும் இதனை நாம் இல்லாதொழிக்கவேண்டும் 

இன்று தோட்டபகுதியில் உள்ள சிருவர் பராமரிப்பு நிலையங்கள் சேதமடைந்து கானப்படுகிறது இதனை நாம் எதிர்காலங்களில் மாற்றியமைக்கவேண்டும் தோட்டதொழிலுக்கு மாத்திரம்தான் மலையக மக்கள் உள்ளார்கள் என சிலர் நினைத்து கொண்டு இருக்கிறார்கள் 

இன்று மலையகத்திலும் அநேகமான பட்டதாரிகள் உருவாகியிருக்கிறார்கள் மலையகத்தில் உள்ள படித்த இளைஞர்யுவதிகளுக்கு தொழில்வாய்பினை உருவாக்கவேண்டும் ஒரு சமுகத்தில் பத்து பெண்கள் மாத்திரம் படித்து வெளிவந்தால் போதாது எதிர்வரும் காலங்களில் மலையகத்தில் உள்ள அனைத்து இளைஞர்யுவதிகளும் முன்வரவேண்டுமென
கேட்டு கொண்டார்

No comments: