ஹட்டனில் (பட்டா) ராக வாகனத்தில் மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்து விபத்து


(எஸ்.சதீஸ்)

ஹட்டனில் இருந்து நுவரெலியா நோக்கிபயணித்த சிரியரக லொறி வண்டியின் மீது மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் லொறி வண்டிக்கு சேதம் சாரதி காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி.

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் நானு ஒயா ரதாலை கார்லிபேக்பகுதியில் மரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் சிறியரக லொறி வண்டிக்கு சேதம் ஏற்பட்டுள்ள தோடு சாரதி காயங்களுக்கு உள்ளாகி நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஒயா பொலிஸார் தெரிவித்தனர்

இந்த சம்பவம் நேற்று  மதியம் 12.30மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று மதியம் பெய்த கடும் மலை காற்று காரனமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டதாகவும் இதனால் சிலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இரானும் பொலிஸார் இணைந்து குறித்த மரகிளையினை வெட்டி அகற்றிய பிறகு போக்குவரத்து வழமைக்கு திரும்புள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நானுஒயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது








No comments: