ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் விபத்து ஒருவர் வைத்தியசாலையில்
(எஸ்.சதீஸ்)
ஹட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் ஹட்டன் ஸ்டெடன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் புலனாய்வு துறை உத்தியோகத்தர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் 03.07.2020.வெள்ளிகிழமை காலை 10.30மணிக்கு இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
ஹட்டனில் இருந்து செனன் பகுதிக்கு சென்ற மோட்டார் சைக்கிலும் செனன் பகுதியில் இருந்து ஹட்டன் பகுதியினை நோக்கி பயணித்த ஜீப்வண்டி இரண்டும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாகவும் ஜீப்வண்டியின் சாரதி ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளதாகவும்
ஜீப்வண்டியின் அதிகவேகம் மற்றும் கவயினமே இந்த விபத்திற்கு காரனம் என ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்டவிசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது கைது செய்யப்பட்ட சாரதியினை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தபட உள்ளதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது
No comments: