இலங்கை தொழிலாளர் காங்கிஸ் கட்சிக்கே பலம் பொருந்திய அமைச்சு பதவி
நுவரெலியா மாவட்டத்தில் அதிக வாக்குகளை பெற்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னமே வெற்றி பெறும்
அதேவேளை இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கே பலம் பொருந்திய அமைச்சு பதவி கிடைக்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதி செயலாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்ன நுவரெலியா மாவட்ட வேட்பாளருமாகிய மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.
மலையக மக்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீதும், எமது மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் மீதும் வைத்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாட்டை இத்தேர்தலில் வெளிப்படுத்துவார்கள்.
![]() |
இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் |
மலையக மக்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீதும், எமது மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் மீதும் வைத்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாட்டை இத்தேர்தலில் வெளிப்படுத்துவார்கள்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேர்தல் வெற்றிக்காக ஒருபோதும் குறுக்கு வழியை கையாண்டது கிடையாது.
யதார்த்த பூர்வமாகவும் உண்மையாகவும் செயற்பட்டதை மக்கள் சரியாக புரிந்துகொண்டு இந்த தீர்ப்பை வழங்குவார்கள். மலையக மக்களுக்கு மன நிறைவான சேவையை வழங்கிய மாபெரும் ஸ்தாபனம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்.
எமது சமூக தலைவர் மறைந்த அமரர் ஆறுமுகன் தொண்டமான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ற மாபெரும் அமைப்பை கட்டிக்காத்தவர். இதனை மலையக மக்கள் அரசியலுக்கு அப்பால் நின்று அவதானித்துள்ளனர்.
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு மலையக மக்கள் மனதில் பெரும் காயத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. மேலும் கடந்த ஐக்கிய தேசிய அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அவர்களோடு சேர்ந்து செயற்பட்ட மலையக அமைச்சர்களும் நடந்து கொண்டவிதம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. பல அரச நிறுவனங்களில் மலையக மக்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்பட்டார்கள்.
![]() |
இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் |
மலையகத்தில் என்றுமில்லாத வகையில் சட்டவிரோத வியாபாரங்கள் தலைவிரித்தாடியது. தோட்டத் துறையிலும், அரச துறையிரும் ஒழுங்கு சீர்குழைந்திருந்தது. இவற்றுக்கெல்லாம் தீர்வை பெற்றுக்கொடுக்கும்
ஆளுமை மிக்க துணிச்சல் மிக்க வீரத் தலைவன் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அந்த வழியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்றும் மக்களுக்காக குரல் கொடுக்கும். இன்று அந்த மகத்தான தலைவனின் மறைவுக்கு பின்னர் மலையகத்தை சின்னா பின்னமாக உடைப்பதில் கண்ணும் கருத்துமாக சிலர் உள்ளனர்.
அவர்களின் பகல் கனவு பழிக்காது. மலையக சமூகத்தை உடைக்க முனைபவர்களுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தலில் தகந்த பாடம் புகட்டும். எனவே நாம் வெற்றி பெறுவது உறுதி என்றார்.
No comments: