மேல் மாகாணத்தில் மாத்திரம் 2000 பொலிஸார் விசேட கடமையில்


கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததைத் தொடர்ந்து உரிய சுகாதார முறைகளைப் பின்பற்றாத முகக்கவசங்கள் அணியாதவர்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு மேல் மாகாணத்தில் மாத்திரம்  2000 பொலிஸார் விசேட கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல்  பொலிஸ் சீருடைக்கு மேலதிகமாக சிவில் உடையிலும் புலனாய்வு அதிகாரிகளும் விசேட கண்காணிப்பில் ஈடுப்படடுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

அத்தோடு முகக்கவசம் அணிந்து சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் முகக்கவசங்கள் இல்லாத நபர்களுக்கும், மேல் மாகாணத்திலுள்ள சிறிய பாடசாலைகளுக்கும் தேவையான முகக்கவசங்களை சமூக பொலிஸ் பிரிவு உதவியுடன் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

No comments: