விசாரணைக்கு நான் தயார் -கருணா அம்மான்


தேர்தல் பரப்புரையின் போது சர்ச்சைகுரிய கருத்துக்களை தெரிவித்தார் என பலதரப்பினராலும் விமர்சிக்கப்பட்ட கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் நாளை குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முன்னிலையாகுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இவர் திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை தமிழர் மகாசபையில் 2020 பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமாவார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேர்தல் பரப்புரையின் போது தான் கொரோனாவை விட கொடியவன் என்றும் ஆயிரக்கணக்கில் இராணுவத்தினரை யுத்தத்தின் போது கொலை செய்ததாகவும் கூறியிருந்தான் இந்த கருத்து பலரது விமர்சனத்திற்கும் உள்ளாகியது.

இந் நிலையில் இவரை குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் ஆஜராகி விசாரணை நடத்துமாறு பதில் பொலிஸ்மா அதிபர் குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்று வினவிய கேள்விக்கு குற்றவியல் திணைக்களத்தில்  என்னால் பதிலளிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

No comments: