வாக்குச் சீட்டு அச்சிடும் பணி இறுதிக் கட்டத்தில்


2020 பொதுத் தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் அனைத்து மாவட்டங்களுக்குமான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக அரசாங்க அச்சு திணைக்களம் தெரிவித்துள்ளது.

18 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கொழும்பு, களுத்துறை, ஹம்பகா, குருணாகல் ஆகிய மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டு அச்சிடும் பணி இறுதிக்கட்டத்தினை அடைந்துள்ளதாக அரசாங்க அச்சு திணைக்களம்  குறிப்பிட்டுள்ளது.


No comments: