கைதிகளுக்கு கையடக்க தொலைபேசி வழங்கியவர்கள் கைது


பொரளை பொலிஸ் அதிகாரிகள் முன்னெடுத்த அதிரடி சுற்றி வளைப்பில் கைதிகளுக்கு கையடக்க தொலைபேசி உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை வழங்கிய வெலிக்கடை மற்றும் மெகசின் சிறைச்சாலை களுக்கு அருகில் வசிக்கும் ஐவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களால் ஹெரோயின் மற்றும் புகையிலை போன்ற போதைப் பொருட்களும் கைதிகளுக்கு வழங்கப்பட்டமை தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதோடு இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படடுள்ளனர்.

இதேவேளை அனைத்து சிறைச்சாலைகளிலும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சிறைச்சாலைகளின் புலனாய்வு பிரிவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்  நாளாந்தம் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்டுவதாகவும்  தெரிவித்துள்ளார்.

No comments: