விமான நிலையம் தொடர்பில் முக்கிய செய்தி


கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த விமான நிலையம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படவிருந்த நிலையில் பயணிகளின் வருகை தாமாதமாகலாம் என்று சுகாதாரப் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதனால் விமான நிலையம் ஓகஸ்ட் மாதம் 15 அல்லது அதற்கு பின்னரோ திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

சுற்றுலாத்துறையை பாதுகாப்பதற்கும் இதனால் நாட்டு மக்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க நடவடிக்கை மேற் கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


No comments: