மாற்றமைடைய பரிந்துரை செய்யப்பட்ட அலுவலக நேரங்கள் விபரம் உள்ளே


நாட்டில் கொரோனா தொற்றை தடுப்பதற்காகவும் சமூக இடைவெளியைப் பேணுவதற்காகவும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும் அரச மற்றும் தனியார் சேவை ஊழியர்களின் வேலை நேர மாற்றத்தினை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய அரச நிறுவனங்களின் வேலை நேரத்தை காலை 9.00 மணிமுதல் மாலை 4.45 மணிவரையும் தனியார் பிரிவின் வேலை நேரத்தை காலை 9.45  மணிமுதல் மாலை 6.45 மணிவரையும் மாற்ற பரிந்துரைச் செய்யப்பட்டுள்ளது.

குறித்த பரிந்துரைகள் அரசாங்க நிர்வாக அமைச்சிடம் மற்றும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அப்பரிந்துரைகளை செயற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார். 


No comments: