திருட முயற்சித்த நபரை மடக்கி பிடித்த பொதுமக்கள் ( ஹட்டன்))
(சதீஷ்)
ஹட்டன் நோட்டன் பிரதான வீதியின் காசல்ரீ பகுதியில் திருத்தி
வைக்கப்பட்டிருந்து பாராஊர்தியின் உதிரிபாககங்களை திருட முயற்சித்தசந்தேக நபர் ஒருவரை மடக்கி பிடித்து ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைத்த
சம்பவம் ஒன்று காசல்ரீ பகுதியில் இடம்பெற்றதுள்ளது இந்த சம்பவம் நேற்று
முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்
குறித்த பாரஊர்தி வீதியின் ஓரமாக நிருத்தி வைக்கபட்டிருந்த வேலை ஹட்டன் பகுதியியை சேர்ந்த நபர் ஒருவர் குறித்த பாரஊர்தியின் இயந்திரம் ஒன்றை கலற்றி கலவாட முற்பட்ட போது அமரர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களுடை மரண வீட்டுக்கு போய் திரும்பி கொண்டிருந்த பொதுமக்களை கண்டு குறித்த சந்தேக நபர் தேயிலை மலைக்குல் தலைமறைவாகியுள்ளதாகவும் குறித்த சந்தேக நபரை இனங்கண்ட மக்கள் மடக்கி பிடித்து தாக்கி ஹட்டன் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து குறித்த சந்தேக நபர் ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளதோடு சந்தேக நபர் பயணித்த மோட்டார் சைக்கில் ஒன்றையும் மீட்டுள்ளனர்
இந்த திருட்டு சம்பவத்தில் குறித்தபகுதியில் அமைதியின்மையும் ஏற்பட்டது
இதற்கு முன்பு குறித்த சந்தேக நபர் இது போன்ற திருட்டு சம்பவத்தில்
ஈடுபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து
தெரியவந்துள்ளது கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரனைகளை மேற்கொண்டு ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தபட உள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன்
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
No comments: