அனுமதியின்றி திறக்கப்பட்ட மதுபான சாலைகள் மூடப்பட்டன -வைத்தியர்.எஸ்.அகிலன் (MOH)


UPDATED: 

மீண்டும் உத்தியோக பூர்வமாக மதுபான சாலை திறக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் சுகாதார அறிவுறுத்தலின் படி செயற்படுமாறு ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.அகிலன் தெரிவித்தார்.

-அகத்தியன் செய்திப்பிரிவு-

தமது பிரிவிற்குட்பட்ட ,அனைத்து மதுபான சாலைகளும் அனுமதியின்றி  இன்று திறக்கப்பட்டிருந்ததாக, ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.அகிலன், எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

மதுபானசாலைகள் திறப்பதற்கான, எத்தவொரு அறிவுறுத்தலும் ஆலையடிவேம்பு, சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு மற்றும் அக்கரைப்பற்று, பொலிஸ் நிலையத்திற்கு, உத்தியோக பூர்வமாக கிடைக்கப்பெறாத நிலையில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள மதுபான சலைகள் திறக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பி்ட்டார்.


இதன் போது எது விதமான சுகாதார அறிவுறுத்தல்களும் பின்பற்றபடவில்லை என்றும் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உடனடியாக அனுமதியின்றி திறக்கப்பட்ட அனைத்து மதுபான சாலைகளையும் உடனடியாக முடுவதற்கு தான் உத்தரவைிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


No comments: