அம்பாரையில் அகவம் அமைப்பினால் நிவாரணப்பணிகள் முன்னேடுப்பு !


(காரைதீவு நிருபர் சகா)

இலங்கையில் கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக  பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து நிவாரணப்பணிகள் பல்வேறு அமைப்புக்களாலும்  தனவந்தர்களாலும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

அந்தவகையில் திருக்கோவில்  பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட தாண்டியடி, விநாயகபுரம் தம்பட்டை, போன்ற பகுதிகளுக்கு நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

கனடா அகவம் அமைப்பின் நிதியுதவியுடன் காரைதீவு சமூக நேயனும் சமூக செயற்பாட்டாளருமாகிய கி.ஜெயசிறில் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலரும் சமூக செயற்பாட்டாளருமாகிய வீ.ரி.சகாதேவராஜா, இளம் விஞ்ஞானி சமூக செயற்பாட்டாளர்.வினோஜ்குமார் ஆகிய குழுவினரால் மேற் குறித்த நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இக் குழுவினரால் அம்பாரை மாவட்டத்தில் காணப்படுகின்ற 50 ற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு (பொத்துவில் தொடக்கம் நாவிதன்வெளி) மக்களின் அத்தியாவசிய தேவை கருதி இரண்டாம், மூன்றாம் கட்டமாக தங்களது நிவாரணப்பணிகளை முன்னெடுத்துள்ளனர். தொடர்ச்சியாக மக்களுக்கு இவர்களது நிவாரணப்பணி தொடரவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

விசேட இரட்டை நிவாரணம் 

விசேடமாக இக் குழுவினரால் கிழக்கில் உருவாக்கப்பட்டுள்ள இரட்டை நிவரணப்பணியானது மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பு பெற்றுள்ளதுடன் பயிர் செய்கை  விவசாயிக்கும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் வாழ்வாதாரத்தினை இழந்து கஷ்டப்படும் மக்களுக்கும் மிகவும் பயன் உள்ளதாக அமைகின்றது சிறப்பம்சமாகும்.

இரட்டை நிவாரணம் இரண்டாம் கட்டத்தினை அடைந்துள்ளதுடன் மூன்றாம் கட்ட இரட்டை நிவாரணப்பணி விரைவில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரட்டை நிவாரணம் முதலாம் கட்டம்

(கழுள்ள லிங்கை அழுத்தவும்)

அறுவடையில் 4 லட்சருபா பெறும் எமக்கு 1000 ரூ-பாகூட இல்லை!

இரட்டை நிவாரணம் இரண்டாம் கட்டம்

(கழுள்ள லிங்கை அழுத்தவும்)

அம்பாறையில் “மே“ தினம் இன்று இரட்டை நிவாரணம் மீண்டும் முன்னெடுப்பு !




















No comments: