சலூன்களுக்கு செல்வோரின் தகவல்கள் திரட்டல்


(எச்.எம்.எம்.பர்ஸான்)

பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி சலூன் கடைகளில் சிகை அலங்காரம் செய்ய செல்பவர்களிடம் அவர்களின் தகவல்கள் பெறப்பட்டு வருகின்றன.


கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் அதன் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் சலூன் கடைகளில் இவ்வாறான திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சலூன் கடைக்குச் சென்ற ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இனங்காணப்பட்டால் ஏனையோரின் பாதுகாப்புக் கருதி அவர்களை இலகுவில் அடையாளங்கண்டு கொள்வதற்காக இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: