ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொட்டகலை சீல்.எல்.எப் நோக்கி கொண்டுசெல்லப்பட்டது


(சதீஸ்) 

இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் வேவண்டனில் உள்ள அவரின் இல்லத்தில் இருந்து 30.05.2020.சனிகிழமை கொட்டகலை சீல்.எல்.எப் கேட்போர் கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது 

ரம்பொடை வேவண்டன் தோட்டபகுதியில் உள்ள அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின்  இல்லத்தில் இருந்து கொட்டகலை சீ.எல.எப் மண்டபத்திற்கு கொண்டு வரவதற்கு முன் மதஅனுஸ்டாங்களும் இடம் பெற்றது.

நேற்றய தினம் அண்னாரின் பூதவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக கொழும்பில் இருந்து  வானுார்தியூடாக   கம்பளை பகுதிக்கு கொண்டு வரப்பட்டு கம்பளையில் இருந்து பேரணியாக வேவண்டன் பகுதியில் உள்ள இல்லத்தில் பொதுமக்னளின் அஞ்சலிக்காக வைக்கபட்டபோது பெருந்திரலான மக்கள் அரசியல்பிரமுகர்கள் என பலரும் அமைச்சரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்

இன்றய தினம் வேவண்டன் பகுதியில் அமைச்சரின் இல்லத்தில் இருந்து தவலந்தென்ன லபுக்கலை நுவரெலியா நானுஒயா லிந்துளை தலவாகலை கொட்டகலை ஊடாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சீல் எல் எப் கேட்போர் கூடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்ட்டுள்ளது.

இதேவேலை நாலைய தினம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொட்டகலை சீ.எல.எப் மண்டபத்தில் இருந்து ஹட்டன் டிக்கோயா ஊடாக நோர்வுட் சௌமிய முர்த்தி தொண்டமான் விளையாட்டு மைதானத்திற்கு மாலை நான்கு மணி அளவில் கொண்டு செல்லபட்டு அரசமாரியாதைகளோடு தகனம் செய்வதற்கான
அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளபட்டிருப்பதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

அமைச்சர் இறுதி கிரியைகள் அரசமரியாதையோடு இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடதக்கது.

இதே நேரம் நுவரெலியா மாவட்டத்திற்கு அரசாங்கத்தினால் பிறப்பிக்கபட்டுள்ள ஊரடங்கு சட்டத்தின் மத்தியில் பொதுமக்கள் சட்டகட்டுபாடுகளை முழுமையாக பின்பற்றுமாறு இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளர் அனுஷியா
சிவராஜா தெரிவித்துள்ளார்.


No comments: