மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து | பொலிஸாரின் அறிவிப்பு !..
நாட்டில் பொருட்கள் உற்பத்தி விநியோகம், மற்றும் மின் உபகரணங்கள் விநியோகம், பல்பொருள் அங்காடிகளுக்கு பொருற்களை கொண்டுசெல்லல் பதப்படுத்தப்பட்ட உணவு விநியோக வலையமைப்புகள் போன்ற நடவடிக்கைகளுக்கு மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்திற்கு விசேட அனுமதி வழங்க பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதனடிப்படையில் குறித்த மேற் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களின் வாகனங்களுக்கு மாவட்டங்களுக்கு இடையிலான ஊரடங்குவேளை அனுமதிபத்திரத்தினை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாவட்டங்களுக்கு பயணிக்கும் மேற் குறித்த வணக நிறுவனங்களின் வாகனங்களின் சாரதி , நடத்துனர்கள், ஆகியேர் சுகாதார பரிசோதகர்களால், உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ்களை பெறவேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.
மேலும் மேற் குறித்த நிறுவனங்களின் வாகன இலக்கம், வாகனத்தை செலுத்தும் சாரதி மற்றும் நடத்துனர் தொடர்பான விபரங்கள் பொலிஸ் தலைமையகத்திற்கு அனுப்படவேண்டுமென கோரப்பட்டுள்ளது.

No comments: