ஊரடங்கு, மற்றும் போக்கு வரத்து தொடர்பில் மக்களுக்கு அறிவித்தல் !


மே 11ம் திகதி நாடு பூராகவும் ஊரடங்கை தற்காலிகமாக தளர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்திருந்தது.


இந் நிலையில் மே 11ம் திகதி ஊரடங்கு நாடு தளுவிய ரீதியில் தளர்த்தப்படு்ம் வேளை பொது போக்குவரத்தில் அதிகம் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொது போக்குவரத்து அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் கீழ் கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்த்தப்படும் போது பொது போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் மிக இறுக்கமன முறையில் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும். என குறிப்பிடப்பட்டுள்ளதுடன்

பொது போக்குவரத்து செயல்பாட்டில் உள்ளபோது கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறை தொடர்பில் உலக சுகாதார அமைப்பிற்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகபவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: