அட்டன் டிக்கோயா தோட்டத்தில் குளவி கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு.


(சதீஸ்)

அட்டன் பொலிஸ், பிரிவுக்குட்ட்ட டிக்கோயா தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகிய ,ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் எட்டுபேர் காயங்களுக்குஉள்ளாகியுள்ளனர்.

அட்டன் எபோட்சிலி, தோட்டத்தை சேர்ந்த 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் ,தாயான அம்பிகாமலர் என்பவரவே உயிரிழந்துள்ளார்

டிக்கோயா தோட்ட, தேயிலை மலையில் கொழுந்து பரித்துக்கொண்டிருக்கையில், இன்று  கா லை 10 மணியளவில் மரமொன்றிலிருந்த குளவி கூட்டை ,கழுகு கொத்தியதில் குளவி கூடு கலைந்து கொழுந்து பரித்துக்கொண்டிருந்தவர்கள் ,மீது கொட்டியுள்ளதுகுளவி கொட்டுக்கு இலக்காகிய ஆறு பெண்களும்,  இரண்டு ஆண்களுமாக எட்டுபேர்
காயமுற்றுள்ளனர், இவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.








No comments: