மட்டக்களப்பில் கையடக்க தொலை தொடர்பு கோபுர தங்கு விடுதியில் கஞ்சா செடி வளர்த்து வந்த இருவர் கைது !
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள தனியார் கையடக்க தொலை தொடர்பு நிறுவனத்தின் தொலைத் தொடர்பு கோபுரம் அமைந்துள்ள தங்கு விடுதியில் கசிப்பு உற்பத்தியிலும்; கஞ்சா செடிவளர்த்து வந்த அந்த நிறுவனத்தில் கடமையாற்றி வந்த இருவரை இன்று சனிக்கிழமை (09) பகல்; கைது செய்ததுடன் கோடா , கஞ்சாசெடி கசிப்பு உற்பத்தி உபகரணங்களை மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த பிரதேசத்திலுள்ள தனியார் கையடக்க தொலைபேசி கோபுரம் அமைந்துள்ள பகுதியிலுள்ள விடுதியை சம்பவதினமான இன்று சனிக்கிழமை பகல் விசேட புலனாய்வு பிரிவு மற்றும் புலனாய்வு பிரிவினர் இணைந்து சுற்;றிவளைத்து சோதனையில் ஈடுபட்டனர்
இதன் போது இங்கு அங்கு தங்கிருந்து கடமையாறி வந்த கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட கருவப்பங்கேணி நாவற்கேணியைச் சேர்ந்த 28 வயதுடையவர் ஒருவரையும் சாடி ஒன்றில் கஞ்சா செடி வளர்த்து வந்த மாத்தறையைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவர் உட்பட இருவரையும் கைது செய்துள்ளதுடன் கசிப்பு ஒரு போத்தல் மற்றும் கோடா கசிப்பு உற்பத்தி உபகரணங்கள் , சுமார் 4 அடி கொண்ட கஞ்சா செடியை மீட்டுள்ளனர்.
இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்

No comments: