அம்பாறை ஒலுவில் இடைத்தங்கல் முகாமில் நால்வருக்கு கொரோனா!
அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒலுவில்
பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா இடைத்தங்கல் முகாமில் உள்ள நால்வருக்கு (04) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்முனை சுகாதார சேவைகள் பனிமனை பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர்கள் சிகிச்சைகளுக்காக கல்முனை சுகாதார சேவைகள் பனிமனை அப்பியூலான்ஸ் மூலம் காத்தான்குடி வைத்தியாலைக்கு நேற்று இரவு (30) அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடற்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் ஒலுவில் இடைத்தங்கல் முகாமில் ஜா-எல சுதுவெல பகுதியை சேர்ந்த பலர் தனிமைப்படுத்தப்படடிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: