பட்டாசு கொளுத்தி தொல்லை கொடுக்காதீர்கள் எனக் கூறியவர் மீது தாக்குதல்


(எச்.எம்.எம்.பர்ஸான்)

பட்டாசுகளை ,கொளுத்தி தொல்லை, கொடுக்க, வேண்டாம் ,எனக் கூறிய நபர் மீது தாக்குதல் நடத்திய ,சம்பவமொன்று நேற்று (24) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை, பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, பகுதியில், சிலர் வீதியில் நின்று பட்டாசுகளை ,வெடிக்க வைக்கும், போது அது அயலவ,ர் ஒருவரின் வீட்டுக்குள் வீழ்ந்து வெடித்துள்ளது. 

அதனையடுத்து, அவ்வீட்டு ,உரிமையாளர் ,பட்டாசு ,கொளுத்தியவர்களிடம் கேட்கச் சென்றபோது அவ்விடத்தில் ,வாய்த்தர்க்கம் ,ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.

இதன்போது, தன்னை நால்வர் ,தாக்கியதாக ,வீட்டு உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த சம்பவம், தொடர்பான ,விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு ,வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: