அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிகிரியைகள் தொடர்பான விபரம்


(கேதீஸ்)

மறைந்த இலங்கை, தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இன்று (27.5.2020), புதன்கிழமை கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

பின்னர் நாளை (28.5.2020) ,வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பாராளுமன்ற கட்டடத் தொகுயில், அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. 

அதன் பின்னர் அங்கிருந்து, அன்னாரின் பூதவுடல் எடுத்துச்செல்லப்பட்டு கொழும்பிலுள்ள இலங்கை, தொழிலாளர் காங்கிரசின் கட்சித் தலைமையகமான சௌமியபவனி,ல் பிற்பகல் 2 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்;படவுள்ளது. 

பின்னர் அங்கிருந்து அன்னாரின் பூதவுடல், எடுத்துச்செல்லப்பட்டு றம்பொடை வௌங்டனிலுள்ள அன்னாரின், இல்லத்தில் 29.5.2020 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மக்கள், அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. அதன் பின்னர் அங்கிருந்து, மீண்டும் பூதவுடல் எடுத்துச்செல்லப்பட்டு கொட்டக்கலை இலங்கை ,தொழிலாளர் காங்கிரஸ் (சி.எல்.எப்) இல்லத்தில் 30.5.2020 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. 

 இறுதிக்கிரியைகள் மறுநாள் ,ஞாயிற்றுக்கிழமை (31.5.2020) பிற்பகல் 2 மணியளவில் இறுதிக்கிரியைகள் ,பூரண அரச மரியாதையுடன் அட்டன் நோர்வூட் தொண்டமான் விளையாட்டு, மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக இலங்கை தொ,ழிலாளர் காங்கிரஸின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. 

ராஜலக்ஷ்மி ,அம்மையாரை துணைவியாக, கொண்ட அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், நாச்சியார், விஜயலக்ஷ்மி,ஜீவன் ,குமாரவேல் தொண்டமான் ஆகியோரின் ,அன்புத் தந்தையுமாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments: