துக்கத்தினால் துவண்டு கிடக்கும் மலையகம் -மக்கள் கருத்து


(சதீஸ்)

மலையகத்தின் ஏகதலைவன் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு என்றுமே ஈடுசெய்யமுடியாது என ஏங்கும் தொழிலாளர்களின் ஏகோபித்த அழுகுறல்

இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவரும் சமுக வலுவூட்டல் மற்றும்
தோட்டஉட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் இழப்பு ஈடுசெய்யமுடியாதது என பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொழிலுக்கு செல்லாது கதருகின்றனர்

இந் நிலையில அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் இழப்பினை முன்னிட்டு பெருந்தோட்ட தொழிலாளர்கள் வீட்டில் இருந்தவாரு கட்சிபேதங்கள் இன்றி வெள்ளை கொடிகளை பறக்கவிட்டு அஞ்சலி
செலுத்திவருகின்றனர்

இதேவேலை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பிரிவை தாங்கி கொள்ள முடியாத மலையக தொழிலளர்கள் தமது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்

அந்தவகையில் தோட்ட தொழிலாழியான மெய்யன் பழனியாண்டி 
கருத்து தெரிவிக்கையில் 

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் இழப்பு மலையகத்திற்கு மாத்திரமல்ல முலு நாட்டுக்குமே பாரிய இழப்பாகும் அமைச்சர் கட்சி பேதங்கள் பறாது மக்களுக்கு பல்வேறு சேவையினை செய்து வந்தார் இருந்தாலும் இலங்கை தொழிலாளர் காங்ரஸை தொடர்ந்தும் வழிநடத்த அவருக்கு இனையாக யார் வருவார் என்பது தொடர்பாக பெரும் கவலையாக உள்ளது இனிமேலும் இவர்போன்ற துனிச்சல்மிக்க ஒரு தலைவரை எமக்கு வாழ்நாளில் கானமுடியாது அன்மைகாலங்களில் வடகிழக்கு பகுதியில் உள்ள தமிழ் மக்களுக்கு கூட பாரிய சேவையினை ஆற்றிவந்தார்

அமைச்சரின் இழப்பு குறித்து யோகமணி என்பவர் குறிப்பிடுகையில் அமைச்சரின் இழப்பு அனைவரையும் சோகத்தில் உள்ளாக்கி இருக்கிறது இவரை போல் ஒரு தலைவரைநாம் தெரிவுசெய்யமுடியாது

 ஆறுமுகன் தொண்டமான் இருந்த காலபகுதியில் இருந்த பலத்தினை இனிவரும் காலங்களில் எவரால் கொடுக்க முடியும் என்கின்ற சந்தேகம்
முலுமலையக மக்களிடமும் ஏற்பட்டுள்ளது இனிவரும் காலங்களில் தோட்ட
தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் பெருந்தோட்ட நிருவனங்களோடு பேரம் பேசும் ஆளுமைமிக்க தலைவர் ஒருவர் இவருக்கு நிகராக யார் இருக்க போகின்றார்

இதேவேலை அமைச்சரின் இழப்பு தொடர்பில் பெண் தொழிலாழியான அனுஸ்னாபதி கருத்து தெரிவிக்ககையில்

 எமது குடும்பம் ஆரம்காலம் தொட்டு இன்று வரை இலங்கை தொழிலாளர் காங்ரஸோடு இருந்து வருகிறது மலையக மக்களுக்கும் மலையகத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் வழிகாட்டியாக மட்டுமல்லாது படித்த இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்பினை பெற்று கொடுத்து வாழ்வாதாரத்தினை மேலோங்க செய்து இருக்கிறார் என்றுமே அவர் எங்களின் ஏகதலைவன் என குறிப்பிட்டார்




No comments: