தம்மை வில்லனாகவும் ஹீரோவாகவும் காட்டிக் கொள்வது கூட்டமைப்பினரே -அருண் தம்பிமுத்து


(கனகராசா சரவணன்)
உலகலாக ரீதியில், கொரோனவிற்கான தடுப்பு இன்னும் கண்டு, பிடிக்கப்பட வில்லை. இந்த நிலையில் தானாகவே இந்த, கொரோனாவுக்கு தடுப்பு உருவாகும் என்கின்றனா., ஆனால் இந்த, கொரோனாவின் மூலமாக இன்று பலருக்கு பேராபத்து உருவாகவுள்ளது எனவே அரசியலும் நிவாரணமும் தேர்தல் என்ற இந்த, நாடகங்களில் இருந்து, அனைவரும் ,வெளியில் வரவேண்டும் ,என மக்கள், முன்னேற்ற கட்சியின் செயலாளர் நாயகம் அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.

மட்டக்களப்பு, கோவிந்தன், வீதியிலுள்ள, மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைமைக் காரியாலயத்தில்,  நேற்று (12) செவ்வாய்க்கிழமை, இடம்பெற்ற ஊடகவியலாளர் ,மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்

வடக்கு கிழக்கு, வாழ் தமிழர்கள் பொருளாதார ரீதியில் பாரிய சவால்களுக்கு மத்தில் வாழ்ந்து ,கொண்டு ,இருக்கின்றனர் தற்போதைய நிலையில் அரசு வெறுமனமே, பணத்தை அச்சிட்டு, வெளியிடுவதன், மூலமாக பணவீக்கம் ஏற்பட்டு, பாரிய பொருளாதாரத்துக்குள் மக்கள்,சிக்கி விடுவார்களே என்ற அச்சம், இருக்கின்றது

அதேவேளை ,அரசால் முன்னெடுத்துவரும் நிவாரண உதவிகளும் சரியான முறையில் மக்களுக்கு ,சென்று அடைவில்லை என்ற கருத்து பரவலாக இருக்கின்றது இதற்கான பெறுப்புக்களை அரசு எடுக்க வேண்டும் ஏனைய பிரதேசத்தில் இருக்கும் பிரச்சனை,வடக்கிலும் கிழக்கிலும் இல்லை.

அவ்வாறே அன்றாட ,உழைத்து வாழும் பலர் பாரிய சவால் இருக்கின்றனர் வெறுமனமே சமூர்த்தி பெறுபவர்களுக்கு ,மட்டும் இந்த பிரச்சனை இல்லை என்ற விடயத்தை, அரசு ,,உணர வேண்டும் அதற்கான தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

போரை ,வழிநடாத்தியது மகிந்த ராஜபஷவும் சரத்பொன்சேக்காவும் இணைந்துதான் ஆனால், 2010 ஜனாதிபதி தேர்தலிலே ஒருவரை நண்பனாகவும் எதிரியாகவும் காண்பித்து சரத்பொன்சேக்காவை ,ஆதரித்து தமது அரசியலை முன்னெடுத் ,தவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு இன்று ஏற்பட்டிருக்கும் ,சவால்களில், இருந்து மீட்பதற்காக திடீரென சுமத்திரன் விடுதலைப் புலிகள் ,ஆயுதம் எந்தியது தவறு என ,தெரிவித்து,-

சுமத்திரனை, ஒரு, பக்கத்தில் வில்லனாக காட்டிக் கொண்டு மற்றப்பக்கம் மாவை போன்றோர்கள் ஹீரோக்களாக காட்டுவதற்கு 2010 பேர் முடிந்த பின் அரசிலுக்கு வந்த ,சுமத்திரனு,ம் தமிழ் தேசிய கூட்டமைப்பும் வெறுமனவே தமது அரசியலை பாதுக்கா, நடாத்தும் நாடகமாகும்.,  இது தமிழ் தேசிய கூட்டமைப்பின், வங்குறோத்த அரசியல் என்பதை அனைவரும் உணரவேண்டும்.

ஆயுத போராட்டத்தில், பலர் இறந்திருக்கின்றனர், பலர் மடிந்திருக்கின்றனர் ஆனால் பல்லாயிரக் கணக்கான மக்கள் இளைஞர்கள் யுவதிகள் தமது வாழ்க்கையை இழந்திருக்கின்றனர்,. இன்று எந்த அரசியல் ,வாதியும் ஆயுதம் எந்தியது தவறு, என பேசமுடியாது ஏன்னென்றால் ,தமிழ் மக்கள் மீது அரசு தமது அராஜகம் ,மற்றும், வன்முறைகளை ,மேற்கொண்டதை எவரும் மறக்க முடியாது

இன்று, சுமத்திரனை, கட்சியில், இருந்து நீக்கவேண்டும், இதனை சம்மந்தனே, மாவையே துணிந்து செய்வார்களா ? ,செல்வம் அடைக்கல நாதன் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியில், வருவாரா ? சிறிசபாரட்னத்திற்கு ஒருபுறம் அஞ்சலியை, செலுத்திவிட்டு மற்றொருபுறம் தெரியாததாக தமது அரசிலை ,நடாத்துபவர்கள் ,எல்லாம் ,தமிழர், போராட்டத்தை எல்லாம் பேசி நாடகத்தை நடாத்தக் கூடாது

தற்போது,  கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளர்களால் அதிகரித்தால் ஜ.டி.எச் வைத்தியசாலையில், தம்மால் ,ஒன்றும் செய்யமுடியாது என தெரிவிக்கும் இந்த நிலையில் ,கொரோனாவிற்காhன தீர்வை, காணவேண்டும் அரசியலும், நிவாரனமும், தேர்தல் என்ற இந்த நாடகங்களில் இருந்து அனைவரும் வெளியில், வரவேண்டும், மக்களின் பொருளாதார. அடிப்படை வாழ்க்கை பிரச்சனைக்கு தகுந்த ,முடிவை, எடுக்கவேண்டுமே, தவிர இது வெறுமனவே அரசிலுக்காக தேர்தலுக்காக தம்மை தயார்படுத்திக் கொள்வது காலமல்ல என்றார்,

#SriLanka, #lka, #TNA, #Political , #Arunthmbimuthu

No comments: