அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிவாரணப்பணிகள் முன்னெடுப்பு !
(காரைதீவு நிருபர் சகா)
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வாழ்வாதாரத்தினை இழந்து நிர்கதியாகி நிற்கும் மக்களுக்கு தனவந்தவர்களாலும் சமூகசேவை
அமைப்புக்களாலும் பல நிவாரணத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் காரைதீவு சமூக நேயனும் சமூக செயற்பாட்டாளருமாகிய கி.ஜெயசிறில் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமாகிய வி.ரீ.சகாதேவராஜா, .இளம் விஞ்ஞானி, சமூக செயற்பாட்டாளருமாகிய வினோஜ்குமார் உள்ளடங்கிய குழுவினரால் அம்பாரை மற்றும் மலையகம் ஆகிய எமது உறவுகள் வசிக்கும் பகுதிகளுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் அம்பாரை மாவட்டத்தில் நாவிதன் வெளி, சம்மாந்துறை, கல்முனை, காரைதீவு, ஆலையடிவேம்பு,திருக்கோவில், பொத்துவில் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, பகுதிகளில் சுமார் ஆயிரக்கணக்காக மக்களுக்கு இவர்கள் தங்களது நிவாரணப்பணியினை முன்னெடுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
அந்தவகையல் நேற்று திருக்கோவில் மற்றும் பொத்துவில் பிரதேச செயலகப்பிரிவிற்குள் உள்ளடங்கும் காயத்திரிகிராமம், நேருபுரம்,தங்கவேலாயுதபுரம், வில்காமம்,சங்கமன் கண்டி ஆகிய கிராமங்களுக்கு அகிலன் அறக்கட்டளை அமைப்பின் நிதி உதவியுடன் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ள சுமார் 250 குடும்பங்களுக்கான நிவாரணப்,பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை பாராட்டத்தக்க விடையமாகும்
இளம் விஞ்ஞானி வினோஜ் குமார் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்விற்கு காரைதீவு சமூக செயற்பாட்டாளர் கி.ஜெயசிறில், சிரேஷ்ட ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமாகிய வி.ரீ.சகாதேவராஜா திருக்கோவில் பிரதேச செயலாளர் (கஜேந்திரன்) மற்றும் உதவிபிரதேச செயலாளர் (கேதீஸ்கரன்) பொத்துவில் பிரதேச செயலாளர் (திரவியராஜ்) கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலாளர் (அதிசயராஜ்) உள்ளி்ட்டவர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் மக்கள் அனைவரும் சமூக இடை வெளியை பேண அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் உலர் உணவுப் பொதிகளை நிவாரணக்குழு எவ்வாறாக கஷ்டமான சூழ்நிலையில் பெற்று ஏழை மக்களுக்கு வழங்குகின்றது என்ற விடையம் சிரேஸ்ட ஊடகவியலாளர் வீ.ரி.சகாதேவராஜா அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன்-
ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மக்கள் தங்களது சுயபாதுகாப்பு நிமித்தம் அரசாங்கம் விடுக்கும் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
மேலும் மக்களுக்கான நிவாரணப்பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் நிவரணக்குழுவினர் தெரிவித்தனர்.
வில்காமம் (திருக்கோவில்)
நேருபுரம் (திருக்கோவில்)
சங்கமன் கண்டி (பொத்துவில்)

காயத்திரி கிராமம் (திருக்கோவில்)









































No comments: