மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை ஒருவர் கைது


(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள ,குளப்பகுதியில், இயங்கி, வந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையத்தினை பொலிசார், இன்று,
ஞாயிற்றுக்கிழமை, (10) முற்றுகையிட்டு, ஒருவரை கைது செய்ததுடன், 250 லீற்றர், கசிப்பு மற்றும் 10 பெரல், ஒரு மோட்டார், சைக்கிளை மீட்டுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர்

விசேட புலனாய்வு பிரிவு மற்றும் மாவட்ட, புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல், ஒன்றினையடுத்து, சம்பவதினமான இன்று, ஞாயிற்றுக்கிழமை ,குறித்த, பிரதேசத்தில் உள்ள, குளப்பகுதியில், இயங்கிவந்த கசிப்பு எற்பத்தி நிலையத்தை, புலனாய்வு, பிரிவினரும் பொலிசாரும் முற்றுகையிட்டு ஒருவரை கைது செய்ததுடன் 250 லீற்றர், கசிப்பு 10 பெரல்கள், மோட்டர்சைக்கிள் ஒன்று என்பவற்றை மீட்டனர்

இதில் கைது, செய்யப்பட்டவர் 32 வயதுடைய பனையறுப்பான், பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் இவரை நீதிமன்றில், ஆஜர்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு,  வருவதாக பொலிசார் தெரிவித்தனர்

No comments: