இலங்கையில் இருந்து லண்டன் நகருக்கான விசேட விமான சேவை எதிர்வரும் மே 3ம் 4ம் 5ம் திகதிகளில் நடை பெறவுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
பிரித்தானிய பிரஜைகளை பிரித்தானியாவுக்கு அழைத்துச் செல்லவும் லண்டனில் சிக்கியுள்ள இலங்கை பிரஜைகளை நாட்டுக்கு அழைத்து வரும் நோக்கிலும் இந்த விசேட விமான சேவைகளை நடத்தவுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்களை அழைத்து வரும் நோக்கில் அவுஸ்திரேவலியா மெல்பேர்ன் நகருக்கும் எதிர்வரும் 8 ஆம் திகதி விமானம் ஒன்றை அனுப்பி வைக்க உள்ளதாகவும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments: