மட்டு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 32 பேர் கைது !


-கனகராசா சரவணன்-

மட்டக்களப்பு ஏறாவூர் களுவாஞ்சிக்குடி காத்தான்குடி வாழைச்சேனை
வவுணதீவு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரில் ஊரடங்குசட்டத்தை மீறி வீதியில் நடமாடிய 21 பேரையும் கசிப்புடன் 8 பேரையும், கஞ்சா மற்றும் ஹரோயினுடன் 3 பேர் உட்பட 32 பேரை கடந்த 24 மணித்தியாலயத்தில் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .

நேற்று வெள்ளிக்கிழமை (01) காலை 6 மணி தொடக்கம் இன்று சனிக்கிழமை (02) திகதி காலை 6 மணிவரையிலான 24 மணித்தியாலயத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறி; வீதியில் நடமாடிய களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் 4 பேரையும். வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் 8 பேரையும், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் ஒருவரையும், வவுணதீவு பொலிஸ் பிரிவில் 8 பேர் உட்பட 21 பேரை கைது செய்தனர்

அதேவேளை கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் 2 பேரையும், களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் 4 பேரையும், ஏறாவூர் பொலிஸ் பிரிவில் 2 பேர் உட்பட 8 பேரையும், கைது செய்ததுடன். காத்தான்குடியில் கஞ்சாவுடன் ஒருவரையும், ஏறாவூர் பொலிஸ் பிரிவில் ஹரோயினுடன் ஒருவர் உட்பட 32 பேரை கைது செய்துள்ளனர்

இதில் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களை அந்தந்த பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் சிலரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாhக அவர் தெரிவித்தார்

No comments: