ஊரடங்கு தளர்வு - மலையகத்தின் நாளாந்த நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பின


(க.கிஷாந்தன்)

நாடு முழுவதும் இன்று (26.05.2020), காலை 4 மணி முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் மலையகத்தின் ,நாளாந்த நடவடிக்கைகளும் வழமைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது.

சுமார் 60, நாட்களுக்கு பின்னர், கொழும்பு, கம்பஹா தவிர ஏனைய மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய,, தேவைகளின் நிமித்தம் மக்கள் இன்று காலை வேளையிலேயே வெளிமாவட்டங்களுக்கு சென்றனர்.

அட்டனில் இருந்து ,கண்டி உட்பட ஏனைய சில, மாவட்டங்களுக்கான அரச மற்றும் தனியார்துறை ,போக்குவரத்து, சேவைகள் இடம்பெற்றன.

அட்டன், நுவரெலியா, பொகவந்தலாவை, கொட்டகலை, மஸ்கெலியா, நோர்வூட், பூண்டுலோயா, தலவாக்கலை ஆகிய நகரங்களில் அனைத்து வர்த்தக நிலையங்களும், திறக்கப்பட்டிருந்தன.

இதுவரையில் காலை 5 ,மணிக்கு நீக்கப்படும், ஊரடங்கு சட்டம் இரவு 8 மணிக்கு அமுலுக்கு வரும்., ஆனால், இனிவரும் ,நாட்களில் இரவு 10 மணி முதல், காலை 4 மணிவரை ,ஊடரங்கு அமுலில் ,இருக்கும். இதனால், இன்று காலை வேளையில், நகர்ப்பகுதிகளுக்கு, பெருந்திரளான மக்கள் வரவில்லை. பெருந்தோட்டப்பகுதிகளில் ,வாழும் மக்கள், பொருளாதார ரீதியிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை மலையக, நகர்ப்பகுதிகளில், அனைத்து நடவடிக்கைகளும் சமூக இடைவெளியைப் பின்பற்றியே ,நடைபெற்றது., ஒரு சிலர் சுகாதார நடைமுறைகளை, பின்பற்ற தவயிருந்தாலும் பெரும்பாலானவர்கள் பொறுப்புடன் செயற்படுவதை அவதானிக்க முடிந்தது.

இதுவிடயத்தில், பொலிஸாரும் உறுதியாகவே, இருந்தனர். சுகாதார நடைமுறைகளை ,பின்பற்றாதவர்கள் எச்சரிக்கப்பட்டனர்,. பஸ்களில் ஆசனங்களின், அளவுக்கேற்பவே ,பயணிகள், அனுமதிக்கப்பட்டனர். மதுபான விற்பனை, நிலையங்களும், திறக்கப்பட்டுள்ளன. எனினும், அண்மைய நாட்களை போல, நீண்டவரிசையில், நபர்கள் நிற்பதை காணக்கூடியதாக இருக்கவில்லை.

No comments: