”விமர்சனங்களை தாண்டியது எனது கலையுலக வாழ்வு” மனம் திறக்கின்றார் ரோஜா !


சிறுவயது முதல் தான் தேர்ந்தெடுத்த துறையில் பல  விமர்சனங்களையும் தாண்டி தனது தந்தையுடன் ஒன்றாக பயணிக்கும் அக்னி சிவகுமாரின் புதல்வி ரோஜா சிவகுமார் (SWARANJLIE) அவர்கள் தனது கலையுலக வாழ்வில் தான் கடந்து வந்த கரடு-முரடான வாழ்க்கை பாதையின் சுவடுகளை அகத்தியனுடன் மனம் திறந்து பகிர்ந்து கொள்கின்றார்.


கேள்வி 01.  உங்களைப்பற்றி ஒரு அறிமுகம்.

பதில்.. எனது பெயர் ரோஜா சிவகுமார் (SWARANJLIE) நான் 11 வயதில் இருந்து பாடுவதற்கு ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் சிறு நிகழ்ச்சிகளில் மேடையேறி பாடினாலும் இப்போது எனது திறமைக்கேற்றவாறு பெரியளவான மேடைகளில் பாடிக் கொண்டு இருக்கின்றேன்.


பாடசாலையில் நான் கல்வி கற்கின்றபோது பாடுவது மிகவும் விருப்பமாக இருக்கும் இந் நாட்களில் நான் பாடுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தேன்.

இதன் பின்பு இசையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றவே ஆடியோ இஞ்சினியரிங் கற்க ஆரம்பித்தேன். அதன் பின்னர் நான் பாடும் பாடல்களுக்கு என்னால் இசையமைத்து கொள்ள கூடியதாக இருக்கிறது.

தற்போது எனக்கு தேவையான பாடல்களை நான் உருவாக்கி கொள்கின்றேன் அத்துடன் இசை கருவிகளில் ஆர்வம் ஏற்பட கிட்டார் வாத்திய கருவியில் தற்போது பயிற்சி எடுக்கி்ன்றேன் .

கேள்வி 02. தற்போது கலைத்துறையில் உங்கள் பயணம் எவ்வாறு இருக்கிறது.?


பதில்.. தற்போது கலைத்துறையில் எனது பயணமானது ஆரம்பத்தில் (கவர்) சோங்ஸ் போட விருப்பமாக இருந்தது பின்னர் சொந்தமாக பாடல் உருவாக்க விரும்பினேன். அதன் பலனாக தற்போது எனது சொந்த உருவாக்கத்தில் இரண்டு பாடல்கள் உருவாக்கியுள்ளேன்.01. மயங்கிப்போனேன (இசையமைப்பு ஜீவானந்தம்)


02. செம்மலே (புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்காக பாடியது)  கருப்பையா பிள்ளை பிரபாகரன்எதிர்காலத்தில் பல பாடல்களை உருவாக்குவதற்கு விருப்பம் அதனால் தற்போது எனது ரசிகர்களுக்காக கவர் சோங்ஸ் பண்ணிட்டடு  இருக்கின்றேன்.

கேள்வி 03. நீங்கள் ஒரு பாடகியாகவும் அதேவேளை பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளரவும்  இருக்கிறீர்கள்? ஊடகம் கலைத்துறை இரண்டையும் எவ்வாறு பார்க்கிறீர்கள்.?

பதில்.. நான் சிறுவயதில் இருந்து ஆங்கிலத்தில் தான் எனது கல்வியினை தொடர்ந்தேன். அப்போது அப்பாவின் (அக்கினி சிவகுமார்) நண்பர் மfபாயர்  மசூர் மெளலானா அவர்கள் அப்பாவிடம் என்னை நேத்ரா டீவிக்கு தொகுப்பாளினியாக பணியாற்றும் படி கேட்டிருந்தார். ஆரம்பத்தில் எனக்கு தமிழ் கொஞ்சம் திக்கி திக்கிதான் பேச முடியும் கஷ்டமாக இருக்கும் என்று அப்பா மறுத்தார். ஆனால் அப்பாவின் நண்பர் விடவில்லை.ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும் போகப்போக பழக்கத்தில் வந்து விடும் என்றார்.நான் கற்றுக்கொடுக்கிறேன். என்று கூற அப்பா சம்மதித்து விட்டார்.


ஆரம்பத்தில் என்னை நிகழ்ச்சி தொகுப்பு பயிற்சியாளராக நேத்ரா டீவியில் நியமித்தனர். பாடலுக்கும் ஊடக நிகழ்ச்சி தொகுப்பிற்கும் இரண்டிற்கும் இடையே மிகவும் வித்தியாசம் உள்ளது.

வேறு தொகுப்பாளர்கள் நிகழ்ச்சி தொகுப்பதனை பார்த்து பழகினாலும் ஆரம்பத்தில் சற்று தடுமாறினேன். அப்போதெல்லாம் நிகழ்ச்சி தயாரிப்பாளர்  (அப்பாவின் நண்பர்) மிகவும் உதவியாக இருந்தார்.பாடும் போது யாரோ ஒருவர் அல்லது பலர் எனக்கு முன்னாடி இருப்பார்கள் அவரைப்பார்த்துதான் பாடவேண்டும் ஆனால் இங்கு அப்படியல்ல ஒரு கெமரா முன்னாடி நமது அனைத்து அசவுகளையும், திறமையையும் காட்டவேண்டும் என்ற நிலைமை வந்தது.  ஆரம்பத்தில் மிகவும் கஷ்டமாக உணர்ந்தாலும் இப்போது தடுமாற்றங்கள் ஏதும் இன்றி என்னால் நிகழ்ச்சி தொகுக்க கூடியதாக இருக்கின்றது.

கேள்வி 04. தற்காலத்தில் கலைத்துறையில் பாடகியாக நடிகையாக மேடையேறும் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் உங்கள் கருத்து என்ன? 

பதில்..மேடையேறும் பெண்களுக்கு சாவல்கள்... என்னை பொறுத்த வரையில் எனது குடும்பம் நான் பாடுவதற்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கின்றார்கள். ஏன் என்றால் என்னுடைய தந்தையின் துறை இது. என்பதால் எனக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவர் ஊக்குவிப்பார்கள்.


ஆனால் என்னை தவிர்த்து வேறு ஒரு பெண் இசைத்துறையில் பாடகியாக வரவேண்டும் என்றால் அவருக்கான ஒத்துழைப்பு மிகவும் குறைவாகவே காணப்படும்.

அது மட்டுமல்ல அந்தப் பெண் இத்துறையில் வளரவிடாமல் ஒருசிலர் தொடர்ச்சியாக நேர்மைறையான விமர்சன கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுவார்கள் .

மிகமுக்கியமாக இறுதிவரை நேர்மறையான கருத்துக்களால் ஒரு பெண்ணை இத்துறையில் வளரவிடாமல் தடுப்பார்கள் இறுதிவரை இந்த போராட்டம் இருக்கும்.

நான் கல்வி பயின்ற இசைக்கல்லுாரியில் எனது பிரிவில் நான் மாத்திரமே பெண் மற்றைய அனைவரும் ஆண்கள் நேர்மறையான கருத்துக்கள் அதிகம் என்னை சரியான முறையில் கல்விகற்க விட மாட்டார்கள் அனைத்தையும் அவர்களே செய்வர் எனக்கு பிடித்த துறையினை நான் தேர்ந்தெடுத்ததால் இப்படியான பாரிய சவால்களை நான் சந்தித்திருக்கின்றேன். இறுதிவரையில் மனம் சோர்ந்து போகும்படியாக கருத்துக்களை கேட்டிருக்கின்றேன்.

சில உறவினர்கள் நண்பர்கள் அவர்களின் பெற்றோர்கள் ஏன் இசைத்துறைக்குள் உள்நுளைய விட்டீர்கள்? கல்வியை தொடர்ந்திருக்கலாம். என பல வகையிலும் கருத்துக்களை பரிமாறி இறுதிவரை இத்துறையில் வளரவிடாமல் தடுக்கும் சந்தர்பங்கள் அதிகமாக இருந்தது.


பெண்கள் இறுதிவரைக்கும் எதிர்மறையான விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் யாரும் ஒத்துழைப்பு வழங்கா விட்டாலும் தனி ஒரு பெண்ணாக தங்களுக்கு பிடித்தவற்றை செய்த கொண்டு ஒரு துறையில் தொடர்ந்து  செல்லவேண்டும்.

கேள்வி 05. பொதுவாக ஒரு கருத்துண்டு. முதல் காதல் ,முதல் பள்ளி கற்பித்த முதல் ஆசிரியர் வாழ்கையில் மறக்கக்க முடியாது என்பார்கள். அதனடிப்படையில் உங்களுக்கு முதல் மேடை எவ்வாறிருந்தது.? 


பதில்.. எனது முதல் மேடை மட்டக்குளியில் ஒரு இசை நிகழ்ச்சியின் போது அப்பா அழைத்ததுக் கொண்டு சென்றார்.பாடனும் என்று நினைத்து கொண்டே பாடினேன் அதேவேளை எனக்கு பயிற்சி (றிகசல்) இருக்கவில்லை வாடவாட பையா..... என்ற பாடல் நான் நன்றாக பாடுவேன்.அப்போது எஸ்.ஏ.வினோஜ் (மாமா) (கீபோடிஸ்ட்) எப்படியாச்சும் பாட வைக்கனும் என்று கீபோட வச்சி சரியான முறையில பாடலுகடகான (ஸ்ருதி) வருகின்றதா என பார்த்தார் .

எனக்கு மேடை என்ற பயம் வரவில்லை. எப்படியோ முதல் மேடையில் ஆடிப்பாடி முடித்து விட்டேன். அப்போது எனக்கு 11 வயது. நிறைய கைதட்டல்கள் எல்லாம் வந்தது. அப்போது அப்பாவின் அக்னி மியூசிக் குறுப்ல உள்ளவங்க அப்பா கிட்ட சொன்னாங்க உங்களுக்கு பாடுவதற்கு உங்களுக்கு பின்னால ஒரு வாரிசு வந்திடுச்சி எல்லா நிகழ்ச்சியிலும் பாட வைப்பம் என்று கூறினார்கள்.இதற்கு பிறகு பாடசாலைக்கு ஒழுங்காக போக மாட்டேன் பொய் காரணம் சொல்லிவிட்டு யாழ்ப்பாணம், ஹற்றன் என்று மேடையேறி பாடுவதற்கு சென்றேன். இதற்கு பிறகு எனக்கு மேடையேறி பாடுவதற்கு எதிர்மறை விமர்சனைங்கள் வந்தபோதும் அவற்றையெல்லாம் காதில் வாங்கி கொள்ளாமல் எனக்கு பிடித்ததுறையில் முன்னேறுவதற்கும் பழகிவிட்டது. பிரயாணம் செய்வதும் பிடித்துவிட்டது.


கேள்வி 06."கம்பன் தறியும் கவி பாடும்" என்பதை போல இந்தியாவை பொறுத்தவரையில் இசையில் ஆர்வமிக்கவர்கள் அதிகமாக காணப்படுகிறார்கள். ஆனால் இலங்கையை பொறுத்தவரை அவ்வாறில்லை விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் மாத்திரமே உள்ளார்கள். ஆர்வம் இருந்தும் வாய்ப்புக்கள் இல்லை.அதற்கான களமும் இங்கில்லை.இதற்கான காரணங்கள் என்ன என நீங்கள் நினைக்கிறீர்கள்.? 


பதில்.. இந்தியாவை பெறுத்தமட்டில் அவர்களது சினிமாத்துறையானது சர்வதேச ரீதியில் பதியப்பட்ட ஒன்று. ஒரு சிறு குறுந்திரைப்படம் என்றாலும் பல நாட்கள் கஷ்டப்பட்டு உழைத்து தான் அதை செய்வார்கள். சர்வதேச அளவில் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க அனைவரும் தயாராக இருப்பார்கள்.எமது இலங்கையிலும் பல கலைஞர்கள் உண்டு திறமையானவர்கள் ஆனால் தேசிய அளவில் செல்ல கூட இங்கு நமது கலைஞர்களுக்கு ஒத்துைப்பு இல்லை. ஏனெனில் இலங்கையில் பெரியளவிலான நிகழ்ச்சிகளுக்கு இலட்சகணக்கில் செலவழித்து இந்தியாவில் இருந்து பல பிரபலங்கள் அழைக்கப்படுகின்றார்கள். ஏன் இலங்கையில் இருக்கும் பிரபலங்களை அழைப்பதில்லை ? இது வே இங்கு இருக்கும் நிலலையினை மிகச் சரியாக எடுத்து காட்டுகின்றது. இதனால் இங்கிருக்கும் கலைஞர்கள் பின்தள்ளப்படுகின்றார்கள்.

கேள்வி.08 உங்களுக்கு நினைவு தெரிந்த காலம் முதல் தந்தையார் பாடிய பாடல்களுள் எந்த பாடல் உங்களை கவர்ந்த பாடல்? 


பதில்.. அப்பாவிடம் கற்றுக் கொண்ட விடயங்கள் என்று பார்த்தால் நிறைய இருக்கு மிகவும் நிதானம் இருக்கு அப்பாவிடம் ஒரு குணம் இருக்கு ஒரு விடயத்தினை எடுத்தால் அது முடியும் முடிக்க முடியும் என்ற விடாமுயற்ச்சி அவரிடம் அதிகமாக இருக்கும். இதனைப்பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டதுண்டு.


ஒரு விடயம் நடக்காது என்று தெரிந்தாலும் அதனை சரிவர முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை நிறைந்தவர்.

பாட்டு விடயத்தில் எனக்கு சில விடையங்கள் தெரியாமல் பாடமுடியாமல் போனால் என்னை மாதிரி பாடனும் என்று எனக்கு திட்டுவார். அப்போது எனக்கு கொஞ்சம் அப்செட்டா இருக்கும் அப்பாவின் எதிர்பார்ப்பு அவரைப்போல நான் பாடனும் என்று.


அப்பா பாடிய பாடல்களில் நிறைய பாடல் எனக்கு பிடித்த பாடல் இருக்கு. அதில் பிரபா மாமா இசையமைந்த "மனசிலே” மற்றும் அத்லாண்டிக் சமுத்திரத்தில் ........"என்ற பாடலை நான் அதிகமாக கேட்பேன். கேட்டு விட்டு அழுவேன்


முதல் ஆரம்ப கால கட்டத்தில் ஒரு மாத காலம் பூராகவும் அப்பாக்கு இசை நிகழ்வுகள் இருக்கும் அதனால் அப்பா வீட்டிற்கு வருவது குறைவு  அப்போ அப்பாவின் சொந்த பாடல்கள் மட்டும்தான் கேட்பேன். பாடல் கேட்கும் போது அப்பா வேணும் அப்பா வேணும் என்று அழுவேன் ஆனால் அந்த தருணங்களில் அப்பா பாடல் நிகழ்ச்சிகளுக்கு சென்றிருப்பார்.

கேள்வி09. இறுதியாக ஒரு கேள்வி நடிகையாகும் விரும்பம் இருக்கின்றதா ? அவ்வாறான வாய்ப்பு கிடைத்தால் ஏற்றுக்கொள்வீர்களா?

பதில்.. நடிக்க விருப்பம் இருக்கின்றதா இல்லையா என்று தெரியவில்லை ஆனா முழு நேரமும் எனது சிந்தனை இசைத்துறையை நோக்கி சென்று கொண்டிருகின்றது.  நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அந்த சமயத்தில் எனக்கு தோன்றுவதை நான் செய்வேன் இப்போது பாடலில் சாதிக்க விரும்புகின்றேன்

வேறேவதுவும் தேவையில்லை நீ மட்டும் போதும் (Cover Song)

இப் பதிவின் முழு அதிகாரமும் ரோஜா சிவகுமார் (SWARANJLIE) அவர்களுடையது.
நேர்காணல்... 
(வடிவேல் டினேஸ்)

No comments: