கொரோனா வரைஸினால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை சடுதியா அதிகரிப்பு !


இலங்கையில் 500ற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தல் முடிவுற்று வீடுதிரும்பியுள்ளதாக அறிமுடிகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காத்தான்குடி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த தொற்றாளர்களுள் 55 பேர் இன்று மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையின் பின்னர் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னர் வீடு திரும்பியுள்ளதாக கிழக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் லதாகரன் தெரிவித்துள்ளார்.

மேற் குறிப்பிடப்பட்ட 55 பேரும் பண்டாரநாயக்கபுர மற்றும் பேருவளை,காலி ஆகிய இடங்களில் இருந்து தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களாவர்.

மேலும் முப்படையினரால் நடாத்தப்படும் 39 தனிமைப்படுத்தும் நிலையங்களில் இருந்து நான்காயிரத்திற்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது

No comments: