உரமானியம் தொடர்பில் விசேட அறிவிப்பு (வியாபாரிகள் அவதானம்) !


பசளை (உரம்)அதிக விலைக்கு விற்பனை செய்கின்ற வயாபாரிகளின்  ”வர்த்த உரிமையினை”  இரத்து செய்யவுள்ளதாக தேசிய உரச் செயலகத்தின் பணிப்பாளர் மகேஷ் கம்மம்பில தெரிவித்துள்ளார்.

உர (பசளை) இறக்குமதி நிறுவனங்களின் போக்குவரத்து செலவு மற்றும் விற்பனையாளர்களின் செலவுகள் ஆகியவற்றை கருத்திற் கொண்டே இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மானிய அடிப்படையில் விவசாயிகளுக்கு வளங்கப்படும்  உரத்தை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுமாக இருப்பின் முறைப்பாடு செய்ய வேண்டும் என தேசிய உரச் செயலகம் தெரிவிக்கின்றது.

இதற்கமைய 0113 40 39 31 எனும் தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது 0113403794 எனும் இலக்கத்திற்கோ அழைப்பினை ஏற்படுத்தி தமது முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மானிய அடிப்படையில் கலப்பு பசளை ஆயிரத்து 150 ரூபாவுக்கும்  50 கிலோகிராம் பசளை ஆயிரம் ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாகவும்
அதன் விலை அதன் உரப் பைகளிலேயே பொறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர்.




1 comment:

  1. இந்த செய்தி முடிவில்லாமல் உள்ளது

    ReplyDelete