அரச ஊழியர்களின் வயிற்றிலடிப்பதை அரசு நிறுத்த வேண்டும் -இம்ரான்
அரச ஊழியர்களின் வயிற்றிலடிப்பதை அரசு நிறுத்த வேண்டும்.- திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஃரூப் தெரிவித்தார்
கிண்ணியாவில் அமைந்துள்ள அலுவலகத்தில் ஊடகங்களுக்கு இன்று (08) கருத்து தெரிவிக்கும் போதே தெரிவித்தார்
பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகளின் செயல்பாடுகள் சுயாதீனமான முறையில் செயற்படுகின்றார்களா? இல்லை யாருடையாவது பிரதிபலனின் அஜந்தாவில் செயற்படுகின்றார்களா? என்று எல்லோராலும் கேட்கப்படும் கேள்வியாக உள்ளது .
கடந்த ஐந்தாம் திகதி இறந்த பெண்ணின் உடலை எரிக்கப்பட்ட பின்னர் இன்று அவருக்கு கொரோனா நோய் இல்லை என்பதை இந்த அதிகாரிகள் முன்வைக்கின்றார்கள்
முஸ்லீம் பெண்ணின் உடல் எரிக்ப்பட்ட செயற்பாடு முஸ்லீம் சமூகத்தின் உரிமையை மீறுகின்ற, பறிக்கும் செயற்பாடாகவுள்ளது
பரிசோதனை நிலையங்களில் மேற்கொள்ளப்படுகின்ற பரிசோதனை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது காணப்படுவதாகவும் தெரிவித்தார்
மேலும் கருத்து தெரிவிக்கையில்
5000 ரூபா வழகுகின்ற செயற்பாடும் பல்வேறு பிரச்சனைகளை கொண்டதாக காணப்படுவதாகவும் அரசினால் வீடு வீடாக வந்து பணம் வழங்கப்படும் என்பதும் அரசியல் நோக்காகக் கொண்டதாக காணப்படுவதாகத் தெரிவித்தார்
அரச ஊழியர்களிடன் ஒரு மாத சம்பளத்தை கேட்கும் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக குற்றம் சுமத்தினார்
அரச ஊழியர்கள் பெரும்பாலானவர்கள் அவர்களது சம்பளத்தில் குடும்பத்தினைப் பராமரிப்பதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருபவர்கள். பெறுகின்ற சம்பளத்தை விட அதிக செலவுகளுக்கு முகங் கொடுப்பதால் அவர்களது மாதாந்த பட்ஜட் துண்டு விழுந்து கொண்டே வருகின்றது.
அரச ஊழியர்களின் சம்பளத்தில் கைவைக்கும் மனோநிலையை அரசு மாற்ற வேண்டும்.
அரச ஊழியர்கள் மட்டத்திற்கு இறங்கி அவர்கள் படும் கஷ்டத்தை உணர்ந்து சில முடிவுகளை எடுக்க வேண்டும்.
அரசு ஊழியர்களின் சம்பளத்தை எதிர்பார்க்கும் அரசு எவ்வாறு தேர்தலை நடாத்த போகின்றது என்ற கேள்வி எழுகின்றது தேர்தலுக்காக பல மில்லியன் செலவாகும் இந்த மாதத்திலிருந்து அரசு எவ்வாறு செயல்படப் போகின்றது.
அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளத்தை எவ்வாறு பொறுப்பு வாய்ந்த அரசாங்கமாக என்ற வகையில் முன்னெடுக்க போகின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது தெரிவித்தார்

No comments: