விவசாய மற்றும் கடற்றொழில் ஓய்வூதியக்காரர்களுக்கு 5000 ரூபாய் நிவரண கொடுப்பனவு !


இன்று கமத் தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபையின் தலைவர் பிரேமசந்திர ஏபா வெளியிட்டுள்ள அறிக்கையில் சகல விவசாய மற்றும் கடற்றொழில் ஓய்வூதியக்காரர்களுக்கு 5000 ரூபாய் நிவரண கொடுப்பனவு வழங்குவதாக குறிப்பிட்டிருந்தார்

 குறித்த கொடுப்பனவானது எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், தபால் மூலம் வழங்கிவைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறித்த நிவாரணத்திற்காக மே மாதத்திற்கு 831 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தபால் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய  நாடு முழுவதும் உள்ள நான்காயிரத்து 200 தபால் அலுவலகங்கள் ஊடாக   தபால் திணைக்களம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படும்  திகதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தாலும் மேற் குறித்தெ  நிவாரணம் பெற தகுதிஉடையோர் தமது ஓய்வூதிய அட்டையை ஊரடங்கு அனுமதிப் பத்திரமாக பயன்படுத்தி அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும்

No comments: