கருஞ்சிறுத்தையின் மரணத்திற்கான காரணம் ?


கடந்த சில தினங்களுக்கு முன்னர் மலையகத்தில் கருஞ்சிறுத்தை ஒன்று பல பிரயத்தனங்களுக்கு மத்தியில் பிடிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த போதும் அது உயிரிழந்துள்ளது.

கருஞ்சிறுத்தையின் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதன் சுவாசப்பை மற்றும் நாளங்களுக்கிடையிலான உறுப்புகளும் பாதிக்கப்பட்டமையே மரணத்திற்கான காரணமென பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, யட்டியாந்தோட்டை சீ பொத் பகுதியில் வீடொன்றுக்கு பின்னால் சிறுத்தையொன்று  பொறியில் சிக்கியது.

பொறியில் சிக்கிய சிறுத்தை தேயிலை செடிகளுக்குள் முடங்கிக் கிடந்தது.

யட்டியாந்தோட்டை வனஜீவராசிகள் அதிகாரிகள் அவ்விடத்திற்கு சென்று சிறுத்தையை காப்பாற்றும் முயற்சிகளை முன்னெடுத்தனர்.

சிறுத்தையை பாதுகாப்பாக வெளியில் கொண்டுவந்து, யட்டியாந்தோட்டையிலுள்ள பாதுகாப்பான காட்டிற்குள் விடுவிக்க நடவடிக்கை எடுத்ததாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் சுகாதார பணிப்பாளர் டொக்டர் தாரக பிரசாத் தெரிவித்தார்.

No comments: