துப்பாக்கி சூடு தொடர்பில் ஒருவர் கைது


பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இரத்மலானை  சொய்சாபுர பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பிலே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு தொடர்பில் அங்குலான மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த 34 ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர், 2018 ஆம் ஆண்டில் தெஹிவளை – கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என தெரியவந்துள்ளது

No comments: