நிர்ணய விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்க முயன்றவர் கைது !


நுகர்வோர் விவகார அதிகார சபையினால் கொழும்பு புறக்கோட்டை 5ம் குறுக்கு வீதியில் உள்ள வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வர்த்தகர் மக்களுக்கு அரிசி விற்க மறுத்ததன் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

சுமார் 300 மூட்டை அரிசியை விற்பனை செய்ய குறித்த நபர் மறுத்துள்ளார்.

அரிசியை அதிக விலைக்கு விற்பதற்கு தாராகியிருந்ததாகவும் (நிர்ணய விலையை விட அதிகமாக) இதற்கான ஆவணங்கள் சிலவற்றை நுகர்வோர் விவகார அதிகாரசபையினர் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உங்களது பிரதேசங்களிலும் நுகர்வோர் விவகார அதிகார சபையினால்  அறிவிக்கப்பட்டுள்ள நிர்ணய விலைக்கு அதிகமாக பொருட்களை விற்பபனை செய்பவர்களை ஆதாரத்துடன் நுகர்வோர் விவகார அதிகார சபையிருக்கு தெரியப்படுத்துமிடத்து அவர்கள் மீது சட்டநடடிக்கை மேற் கொள்ளப்படும்


No comments: