ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு !
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி நாட்டினை வழமையான நிலைக்கு கொண்டுவரும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மேற் குறித்த திட்டங்களை அறிவிக்கும் வர்த்தமானி வெளியீடு ஒன்று வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே குறித்த வர்த்தமானி அறிவித்தலின் படி செயற்படவேண்டும் எனவும் அதை மீறி செயற்படடால் கடுமையான சட்ட நடடிவக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு, ஹம்பகா, களுத்துறை, மற்றும் புத்தளம் ஆகியமாவட்டங்களை தவர்த்து ஏனைய மாவட்டங்களுக்கு எதிர்வரும் மே பதினொராம் திகதி காலை 05 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கானது மீண்ம் இரவு 08 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் இந் நடைமுறை நாளாந்தம் நடைமுறைக்கு இருக்கும் என்று கொழும்பு ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் எதிர்வரும் திங்கட்கிழமை (மே11) அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைவாக திறக்கப்பட்டவுள்ளதாக அறியமுடிக்கின்றது அத்துடன் கொழும்பு, ஹம்பகா, களுத்துறை, மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கினை அமுலில் வைத்தபடியே அரச மற்றும் தனியார் நிலையங்களை திறப்பதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேல் மாணகணத்திலும் புத்தளம் மாவட்டத்திலும் ஊரடங்கினை தளர்த்தாமல் அரச மற்றும் தனியார் நிறுவன செயற்பாடுகளை முன்னெடு்க்க முடிவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமுலில் இருக்கும் பகுதிகளுக்கு அடையாள அட்டை அனுமதி நடைமுறை திங்கட் கிழமை முதல் அமுலாகும் என்பதுடன் தனிமைப்படுத்தல் நடவடிக்கை சட்டத்தின்படி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அறியமுடிகின்றது.
மேலும் கட்டாயமான முகக்கவசங்கள் அணிவதுடன் சமூக இடைவெளியினை பேணுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: