மட்டக்களப்பில் கொரோனா தொற்று நீக்கி வீசுறும் நடவடிக்கையில் பொலிசார் தீவிரம் !
-கனகராசா சரவணன்-
மட்டக்களப்பில் கொரோனா தொற்று வைரஸ்சை தடுக்கும் செயற்திட்டத்தில் மட்டு தலைமையக பொலிசார் மற்றும் மாநகரசபை இணைந்து நகரத்தின் பொது இடங்களில் தொற்று நீக்கி வீசுறும் நடவடிக்கையை இன்று ஞாயிற்றுக்கிழமை (10) முன்னெடுத்துவருகின்றனர்.
இதன் அடிப்படையில் நகரின் பிரதான வீதி மற்றும் கடை தொகுதிகள் அடங்கிய பகுதி பஸ்தரிப்பு நிலையம் போன்ற மக்கள் கூடும் இடங்களில் இந்த தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் பொலிசாரின் தண்ணீர் வீசிறும் வாகனம் மூலம் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது இதில் மாநகரசபை மேஜர் ரி.சரவணபவான், மட்டு தலைமைய பொலிஸ் நிலைய பெறுப்பதிகாரி பி.கே. ஹட்டியாராச்சி, மற்றும் பொலிசார் ஆகியோர் கலந்து கொண்டு இந்த தொற்று நீக்கி விசுறும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


No comments: