வணக்கஸ்தலங்களுக்கு செல்லும் மக்களுக்கான முக்கிய அறிவிப்பு



-அகத்தியன் செய்திப்பிரிவு-  

வணக்கஸ்தலங்களுக்கு, செல்லும் மக்களுக்கான முக்கிய, வேண்டுகோள் ஒன்றினை சுகாதார அமைச்சு, அறிவித்துள்ளதாக ஆலையடிவேம்பு, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ், அகிலன் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் மதஸ்தலங்களில் விசேட, ஆராதனை மற்றும் பூசை வழிபாடுகளை மேற் கொள்ளும் போது மிக இறுக்கமான, கட்டுப்பாடுகள் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தி சேவைக்கு, தெரிவித்தார்.

மேலும் 03 நேர வழிபாடுகள் இடம்பெறும் போது பூசகர் உள்ளிட்ட 05 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மக்களுக்காக மேற் கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு மக்கள பூரண ஒத்துளைப்பு வழங்க வேண்ம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

கிழக்கு மாகாணத்தில் கிழக்குமாகாண சுகாதாரப்பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந் நடவடிக்கை மேற் கொள்ளப்படவதாகவும் எமக்கு தெரிவித்தார்.

மக்கள் ஆலையம் செல்வது முற்றாக தடை ,செய்யப்பட்டுள்ளதுடன் மீறி செயற்படுபவர்கள் மிது,  சட்டநடவடிக்கை மேற் கொள்ளப்படுவதுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இம்ம மாத இறுதியில், நடை பெறும் வணக்கஸ்தலங்கள் சம்மந்தமான கலந்துரையாடலில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் அல்லது மேலும் இறுக்கமான கட்டுப்பாடுகள் ,நடைமுறைப்படுத்தப்படலாம் என்றும் தெரிவித்தார்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

மேலும் தனது, கட்டுப்பாட்டு எல்லைக்குள், அமைந்துள்ள ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள, ஆலயங்களில் பூசைகளின், போது பூசகர், உள்ளிட்ட 05 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்டார்.

அறிவுறுத்தலை, மீறி ஆலையம், செல்லும் மக்களை, ஆலைய நிர்வாகம் கட்டுப்படுத்துமாறும் ,அவ்வாறு கட்டுப்படுத்தப்படாத ,பட்சத்தில் ஆலைய நிர்வாகத்தின் மீதும் அறிவுறுத்தலை, மீறி ஆலையம் ,சென்ற நபர்களுக்கு எதிராக ,சட்டநடவடிக்கை, எடுக்கப்படுவதுடன் , 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு,  உட்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் ,குறிப்பிட்டார்

No comments: